Thursday, October 14, 2010

காதல் இரத்தம்


 எத்தனை முறை சொல்லியும்          
ஏற்கவில்லை காதலை அவள் 

ஒரு நாள் எதற்காகவோ 
எதிரே வந்தாள் ...நின்றாள்

அழகு அடித்தது 
என் கண்களில் 
அவளை விழியில் வைத்து 
இமையால் மூடினேன் 
ஒரே இருட்டு !

இருட்டுக்கு பயந்து 
இதயத்திற்குள் விழுந்து விட்டாள்
 வலி தாங்காமல் வலது கையை 
இடது நெஞ்சில் வைத்தேன் ...

அழுத்தம் தாங்காமல் 
அழுதே விட்டாள்
ஆக்சிஜன் தந்து ஆசுவாசபடுத்தியது
என் இதயம் !

அயர்ச்சியில் கண் விழித்தவளுக்கு
ஆச்சர்யம் ...ஒரே செந்நிறம் !
இரத்தத்தின் நிறத்தில்  மயங்கி 
இரத்தத்தோடு கலந்து விட்டாள் !

தேகம் சூடாகி 
இமை தெறிக்க 
எதிரே என்னவள் ....
என்னை காதலிக்கிறேன் என்றாள் !

சிரித்தேன் ...
வெட்கப்பட்டு வேகமாக சாய்ந்தாள்
என் இடது பக்க நெஞ்சில் ...!
இதயம்  சொல்லியது 
என் இரத்தம் அல்லவா ?!