கலைந்த முடி
மேல்சட்டை பையில்
பேனா மை
சிலிப்பர் செருப்பு
முதுகில் சுமையாய்
புத்தகப் பை
காலையில் குளிக்க சொன்னால்
கொலை வெறி வரும்
பள்ளிக்கு செல்கையில்
பயம் வெறுப்பு என
மனம் ஊசலாடும்
தேர்வுகள் என்றால்
உயிர் போய்
உடம்பு சில்லிடும்
ஆசிரியை அடிக்கையில்
கோபம் கண்ணீராய் கொப்பளிக்கும்
அனைத்தும்
நினைவுக்கு வருகிறது
என் மகனை
நான் பள்ளிக்கு அனுப்புகையில் !!!