Friday, November 26, 2010

பசிக்கொடுமை


வறுமை நாடுகளின் 
பசிக்கொடுமை நினைவில் வர 
பருக்கை மிச்சமில்லாமல்  
வழித்து பசியாறினேன் 


சாதம் கேட்டால்
போடவா மாட்டேன் 
பிச்சைக்காரன் போல் 
எச்சமில்லா  உண்கிறாயே என 
கோபம் கொண்டு 
மீண்டும் பரிமாறினாள்
பாசக்காரத் தாய் 


விளக்கம் சொன்னால்
விளங்காது இவளுக்கு 
பாசக்கண்ணுக்கு பார்வை 
கிடையாது  என 
மீண்டும் உண்டு 
பந்தியைவிட்டு வெளியேறினேன் 


வீட்டின் வெளியே 
அம்மா சோறு என்றான் 
பசிகொண்ட பிச்சைக்காரன் 
மிச்ச மீதியில்லை 
போய் நாளை வா என்றாள் 
பாசம்கொண்ட அன்னை 


விரக்தியோடு திரும்புபவனை 
சிரத்தையோடு கண்கள் பார்க்க 
வயிற்றில் இருக்கும் உணவு 
சோகத்தில் வயிற்றை முட்ட 
கோபமும் பாவமுமாய் 
கலவையான உணர்ச்சியோடு 
நின்று கொண்டிருக்கிறேன் 
வயிறு முட்ட ...
உணவு 
வயிறு முட்ட ....!!!



Tuesday, November 16, 2010

கடற்கரை காதல்



கடல் முகம் 

நாம் 
கடலோரம் காற்றாட 
நடந்து போகையில் 
என் காலை 
பிடித்து  கெஞ்சுகிறது கடல் 
உன் அழகு முகத்தை 
கொஞ்ச வேண்டும் என்று !

நான் எவ்வளவு சொல்லியும் 
இது உனக்கான முகம் என்று 
மறுத்துவிடுகிறாய் நீ !

கடைசியில் காலில் 
ஏதோ கறைபட்டு 
கழுவ செல்கிறாய் ...

உன் காலை 
முத்தமிட்ட மகிழ்ச்சியில் 
ஆனந்தமாய் கூச்சலிட்டு 
குதிக்கிறது கடல்...
அலையாய் !!!

வானமும் கடலும் 

உன் விரலோடு 
என் விரல் சேர்த்து 
வீசி நடக்கையில்...


தன இயலாமையால்
அலை அலையாய் 
அழும் கடலுக்கு 
ஆறுதலாய் அதன் 
தலை தடவும்  வானம் 
காரணம் கேட்ட பின் 
தானும் அழுகிறது 
மழை மழையாய் !!!


இருவரையும் நனைத்து விட்ட 
மழையை சாடுகிறேன் நான்
மழையால் உன் விரல் 
தொட்டபின் அழுகையை 
நிறுத்தி விடுகிறது 
வானம் !
விரக்தியில் வேகமாய் 
அழுகிறது 
கடல் !



Tuesday, November 9, 2010

காமம் !!!


காமம் !!!

கண்ணில் காதலாய்
உதட்டில் ஆசையாய்
உடம்பில் வெப்பமாய்

உறுப்பில் விரைப்பாய்
கடைசியில் கழிவாய்

வெளியேறுகிறது
காமம் !!!

காமக்கடவுள்  !!!

காதல் போரில்
கட்டில் களத்தில் 
உடம்பை கொடுத்து 
உயிரை வாங்குகிறாள் 
அரசி 

உயிரை கொடுத்து 
மூச்சை வாங்குகிறான் 
அரசன் 

இங்கே  
முனகல் ஓசையுடன்
உயிர்கள் பரிமாறப்படுகின்றன 
காமம் என்னும் கடவுளுக்காக !!!

 

Tuesday, November 2, 2010

மீனும் தமிழும் !!!



மீனும் தமிழும்  !!!
ரே சத்தத்தை 
மீண்டும் மீண்டும் எழுப்பி கூச்சலிடும்
வியாபாரியின் வாயை பார்த்து 
யாரை கூப்பிடுகிறார் 
என்று குழப்பத்தோடு இருந்த
இவைகளுக்கு 
குழம்பில் இடும்போதுதான் தெரிகிறது 
மீன் என்பது 
இவைகளின் பெயர்தான் என்று !!!


மீனவன் !!!

சிங்கள தேசத்தில் 
மீன்கள் கூட 
கொலை செய்கிறது 
சிங்களப்படை துணையுடன் ....
வெற்றியின் அடையாளமாய் 
மீன்கொடி பறக்கவிட்ட 
தமிழனை !!!


மீன் விழி !!!

முள்ளாய் குத்தும் 
அவள் பார்வைகள் 
உணர வைக்கின்றன 
அவள் விழிகள் 
மீன்கள் என்று !!!