இனப்படுகொலை கண்டு
இறப்பதே மேல் என்று
இறைவனை வேண்டினேன்
இறந்துவிட்டான் நண்பன் என்று செய்தி !
உண்மையில் ஒருகணம் இறந்து
உயிர்தெழுந்தேன் !!!
கல்லூரியின் முதல் நண்பனே ! முதலாவதாய் முந்தி கொண்டாயே மரண போட்டியில் !!!
உன் கண்ணாடி
என் கண் முன்னே நிலாடுகிறதே
உன் சிரிப்பு சத்தம்
என் சிந்தையில் இன்னும் கேட்கிறதே !
உன் திறமை ஊரறியும் !
உலகறியும் ஒரு நாள்
எதிர்பார்த்து காத்து இருந்தேன் !
புதிராய் ஆகிவிட்டாயே !
கல்லூரி வாழ்க்கையில்
கிண்டலும் கேலியும்
விதிக்கபடா விதி !
விதியால் மதியிழந்து பலர்
மனதை புண்படுத்தி இருக்கிறேன்!
மணவறை வந்து
மன்னிப்பு கேட்கலாம் என்றிருந்தேன்
மரண கவிதை வரைய வைத்து விட்டாயே !
குழந்தையாய் பிறந்து
குழந்தையாய் வளர்ந்து
குழந்தையாய் இறந்து விட்டாயே!
என் குழந்தை நண்பா!
எட்டு வருட நினைவுகளே
எனக்கு கவிதை எழுதியும்
கரையவில்லை !
உன் பெற்றோருக்கு ..........
உன் பெற்றோரின் ஓலம்
கடவுளுக்கு கேட்காது
காரணம் இங்கே
கடவுளின் காதுகளில்
துளைகள் இருப்பதில்லை !
அங்கே
கடவுளை கண்டால்
அடுத்த ஜென்மத்தில்
அதே பெற்றோருக்கு
அணையா ஜோதியாய்
அமைய வேண்டி கேள் !
அடுத்த ஜென்மத்திலாவது
அவர்கள் கனவு மெய்படட்டும்
அவர்கள் ஜோதியை
அகிலம் அறியட்டும் !
ஜோதியின் உயிர் நின்றிருக்கலாம்
ஜோதியின் உடல் அழிந்திருக்கலாம்
ஜோதியின் நினைவுகள் அழிவதில்லை
உண்மையில்
என் ஜோதி அணையும் வரை !!!
----- கண்ணீருடன் நண்பன் !!!