மீனும் தமிழும் !!!
ஒரே சத்தத்தை மீண்டும் மீண்டும் எழுப்பி கூச்சலிடும்
வியாபாரியின் வாயை பார்த்து
யாரை கூப்பிடுகிறார்
என்று குழப்பத்தோடு இருந்த
இவைகளுக்கு
குழம்பில் இடும்போதுதான் தெரிகிறது
மீன் என்பது
இவைகளின் பெயர்தான் என்று !!!
மீனவன் !!!
சிங்கள தேசத்தில்
மீன்கள் கூட
கொலை செய்கிறது
சிங்களப்படை துணையுடன் ....
வெற்றியின் அடையாளமாய்
மீன்கொடி பறக்கவிட்ட
தமிழனை !!!
மீன் விழி !!!
முள்ளாய் குத்தும்
அவள் பார்வைகள்
உணர வைக்கின்றன
அவள் விழிகள்
மீன்கள் என்று !!!