Wednesday, July 1, 2009

இரங்கல் கவிதை !!!

இனப்படுகொலை கண்டு


இறப்பதே மேல் என்று


இறைவனை வேண்டினேன்


இறந்துவிட்டான் நண்பன் என்று செய்தி !



உண்மையில் ஒருகணம் இறந்து


உயிர்தெழுந்தேன் !!!


கல்லூரியின்


முதல் நண்பனே !


முதலாவதாய் முந்தி கொண்டாயே


மரண போட்டியில் !!!



உன் கண்ணாடி


என் கண் முன்னே நிலாடுகிறதே


உன் சிரிப்பு சத்தம்


என் சிந்தையில் இன்னும் கேட்கிறதே !



உன் திறமை ஊரறியும் !


உலகறியும் ஒரு நாள்


எதிர்பார்த்து காத்து இருந்தேன் !


புதிராய் ஆகிவிட்டாயே !


கல்லூரி வாழ்க்கையில்


கிண்டலும் கேலியும்


விதிக்கபடா விதி !


விதியால் மதியிழந்து பலர்


மனதை புண்படுத்தி இருக்கிறேன்!


மணவறை வந்து


மன்னிப்பு கேட்கலாம் என்றிருந்தேன்


மரண கவிதை வரைய வைத்து விட்டாயே !

குழந்தையாய் பிறந்து


குழந்தையாய் வளர்ந்து


குழந்தையாய் இறந்து விட்டாயே!


என் குழந்தை நண்பா!

எட்டு வருட நினைவுகளே


எனக்கு கவிதை எழுதியும்


கரையவில்லை !


உன் பெற்றோருக்கு ..........


உன் பெற்றோரின் ஓலம்


கடவுளுக்கு கேட்காது


காரணம் இங்கே


கடவுளின் காதுகளில்


துளைகள் இருப்பதில்லை !


அங்கே


கடவுளை கண்டால்


அடுத்த ஜென்மத்தில்


அதே பெற்றோருக்கு


அணையா ஜோதியாய்


அமைய வேண்டி கேள் !


அடுத்த ஜென்மத்திலாவது


அவர்கள் கனவு மெய்படட்டும்


அவர்கள் ஜோதியை


அகிலம் அறியட்டும் !


ஜோதியின் உயிர் நின்றிருக்கலாம்


ஜோதியின் உடல் அழிந்திருக்கலாம்


ஜோதியின் நினைவுகள் அழிவதில்லை


உண்மையில்


என் ஜோதி அணையும் வரை !!!


----- கண்ணீருடன் நண்பன் !!!

Wednesday, June 10, 2009

பெண் !!!


தாயை பிரிந்து

தந்தையை மறந்து

யாருக்கோ ஒருத்தருக்கு !

மனைவி ஆகையில்

மனது வலித்தது !

யாருக்கோ ஒருத்திக்கு

தாயாகையில்

வயிறு வலித்தது !

எல்லாம் மறைந்து

கண்நீர் மலையாய்

கழுத்தில் விழுந்தது

அவள் 'அம்மா '

என்கையில்!!!

Thursday, May 7, 2009

மனித இனம் !!!

அதிகாலை எழுந்து

அன்றாட கடமை முடித்து

அவசரமாக அலுவலகம் செல்கையில்

அங்காங்கே பள்ளி செல்லும் குழந்தைகள் !

அவர்கள் புன்னைகையில்

நான் உயிர் பெற

உள்ளம் சொன்னது

உண்மையில் மனித இனமே

உன்னதமானது !!!

உலக நடப்பு உணர

ஓடி வாங்கினேன்

செய்தித்தாள் !!!

ஒரு உயிர் இன்னொரு உயிரை

எடுக்கும் உன்னதம்

இந்த மனிதத்தின் மகத்துவம் என்றபோது

உண்மை ஓங்கி அடித்தது !!!

அடிமைகளை காக்க

ஆயுதமேந்தியது ஒரு இனம்

அடிமைகளை அழிக்க

ஆயுதேமேந்தியது அரச இனம்

ஆஹா என வேடிக்கை

பார்க்கிறது அதே மனித இனம் !!!

ஐயோ மனித இனமே !

உன் ஆரம்பமே இன்னும் முழுதாக

அறிய முடியவில்லை

அழிவை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறாயே !!!

இனம் மொழி

அடையாளம் காண்பதற்கு

அழிப்பதற்கு அல்ல !!!

கடவுள் படைப்பார்

கடவுளே அழிப்பார்

நாம் அழிக்க

நாமென்ன கடவுளா?

காலம் கடந்து

கல்லறை செல்வதை விட

கடல் கடந்து

கரை தேடலாம் போருக்கு !!!

வாழ்க்கை தரலாம்

நாலு பேருக்கு !!!

உரக்க சொல்லி

விழ வைப்போம்

உலக தலைவர்களின் காதுக்கு !!!