அதிகாலை எழுந்து
அன்றாட கடமை முடித்து
அவசரமாக அலுவலகம் செல்கையில்
அங்காங்கே பள்ளி செல்லும் குழந்தைகள் !
அவர்கள் புன்னைகையில்
நான் உயிர் பெற
உள்ளம் சொன்னது
உண்மையில் மனித இனமே
உன்னதமானது !!!
உலக நடப்பு உணர
ஓடி வாங்கினேன்
செய்தித்தாள் !!!
ஒரு உயிர் இன்னொரு உயிரை
எடுக்கும் உன்னதம்
இந்த மனிதத்தின் மகத்துவம் என்றபோது
உண்மை ஓங்கி அடித்தது !!!
அடிமைகளை காக்க
ஆயுதமேந்தியது ஒரு இனம்
அடிமைகளை அழிக்க
ஆயுதேமேந்தியது அரச இனம்
ஆஹா என வேடிக்கை
பார்க்கிறது அதே மனித இனம் !!!
ஐயோ மனித இனமே !
உன் ஆரம்பமே இன்னும் முழுதாக
அறிய முடியவில்லை
அழிவை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறாயே !!!
இனம் மொழி
அடையாளம் காண்பதற்கு
அழிப்பதற்கு அல்ல !!!
கடவுள் படைப்பார்
கடவுளே அழிப்பார்
நாம் அழிக்க
நாமென்ன கடவுளா?
காலம் கடந்து
கல்லறை செல்வதை விட
கடல் கடந்து
கரை தேடலாம் போருக்கு !!!
வாழ்க்கை தரலாம்
நாலு பேருக்கு !!!
உரக்க சொல்லி
விழ வைப்போம்
உலக தலைவர்களின் காதுக்கு !!!