கவிதைகளால் இளைப்பாறுவோம்.
தாயை பிரிந்து
தந்தையை மறந்து
யாருக்கோ ஒருத்தருக்கு !
மனைவி ஆகையில்
மனது வலித்தது !
யாருக்கோ ஒருத்திக்கு
தாயாகையில்
வயிறு வலித்தது !
எல்லாம் மறைந்து
கண்நீர் மலையாய்
கழுத்தில் விழுந்தது
அவள் 'அம்மா '
என்கையில்!!!