Friday, December 31, 2010

புதிய நாட்கள் 2011 !!!


வ்வொரு வருடமும்
ஓடிகொண்டே இறந்து போகும்
உங்களை
அடுத்த வருடமும்
அப்படியே செய்வீர்களென்று
அறிவியல் அறிவு சொன்னாலும்
ஆரவாரத்தோடு வரவேற்கும்
எங்களை
மகிழ்ச்சிப்படுத்த
ஒரு மணித்துளி 
அதிகமாய் வாழ்ந்து 
ஆயுளை நீட்டித்து 
போக  வேண்டாம் 
வாழும் கணங்களில் 
வருகின்ற ஆண்டிலுள்ள 
இரண்டு ஒன்றைப்போல் 
இரண்டு கைகளையும் 
உயர்த்தி மகிழும் 
வியர்வை தாரும் 
என் 
விருப்பத்திற்குரிய நாட்களே !!!
Thursday, December 23, 2010

காதல் களவியல் !!!காதல் களவியல்

பருவப் பெண்களை
எதேச்சையாய் பார்க்கையில்
காமமும் வெப்பமும்
கலந்து விளையாட
கண்களும் இமைகளும்
இணைந்து விடைதேட
பகலிலேயே நினைவுகளால்
முடித்து விடும்
களவியல் விளையாட்டுகள்

உன் கண்கள்
பார்த்து பேசுகையில்
காற்றில் நழுவும்
தாவணி கண்டு
என் கண்கள்
உன்னைவிட்டு
எங்கேயோ பார்ப்பதன்
உளவியல் அர்த்தம்
என் காதலில்
காமத்தை மீறிய
தாய்மையும் இருப்பதே !!!

உன்னைத் தேடி 

நீ சிரிக்கையில்
என் சிரிப்பை நிறுத்தி
உன் சிரிப்பின் அழகை
சிந்தாமல் ரசிக்கையில்...
என்னை பார்க்காமல்
இருந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
என்னும் உன் கேள்விக்கு
யோசிக்காமலேயே
சொல்கிறேன்
பார்வை இருந்தும்
குருடனாய்
வாழ்ந்திருப்பேன் என்று !

Monday, December 20, 2010

விண்மீன் !!!

விண்மீன் 

விண்மீன்களாய் 
உன் கண்கள் என்க
கோபமான விண்மீன்கள் 
இரவோடு இரவாக 
எங்கோ மறைந்து விட 
இமைக்காமல் தேடியும் 
எங்கும் காணவில்லை 
என் முன்னாள் காதலியாம் 
முழுகாத விண்மீன்களை
இருண்ட தேசத்தில் 
இழவோடு அமர்ந்திருக்க 
எதிரே வரும் உன்னிடம்
விண்மீன்களாய் 
உன் கண்கள் !

மக்களாட்சி 

அறிவாய் பேசுகிறாய் 
அரசியல்வாதி 
ஆகிவிடு என்றார்கள்
அனைத்தையும் இழந்து 
அரசியல்வாதி ஆனேன் 
அழகாய் புளுகுகிறாய் 
என்கிறார்கள்


Friday, December 10, 2010

காயும் பழமும் !!!

 
காடு வயல் வரப்பு விட்டு
கல்விக்கூடம் தேடி
விபரமறியா ஞானிகளோடு
வியர்வையாய் சேர்ந்துபோனேன்...

என் வணக்கத்துக்கும்
மரியாதை தந்தார்கள்
ஆசிரியரும் தேசியக்கொடியும் !

சாதியையும் தெரியாது
சகதியையும் தெரியாது
சர்வமும் தெரியும்
மனிதர்களாய் மட்டும் !

மேடு பள்ளம் இல்லா
மென்மையான தோழிகள்
கன்னத்தில் முத்தம் தந்தாலும்
காதல்  இல்லா நட்பு !

அழகான ஆசிரியை 
மலைகளின் வடிவமாய்
மேடுகள் இருந்தாலும்
முகம் மட்டுமே
நிலவாய் அழகு !

அடித்து புரண்டு 
அழுது கண்ணீர் விடுவோம்
அடுத்த கணமே
காயும் பழமும்
இரட்டை விரல்களால்
ஒற்றை நட்பாகும் !

அத்தனை இருந்தும்
ஆசைப்பட்டோம்
அப்பாபோல் வளர !!!

அப்பாவாக ஆனாலும்
ஆசைபடுறோம்
அதே குழந்தையாய்
மீண்டும் மலர !!!

ஆசை நிறைவேறியது
ஆனால் உருவம் மட்டும்
கிழவன் கிழவியாய் !!!Wednesday, December 1, 2010

காதலின் இசை !!!


இருண்ட பிரதேசத்தில்
இசை வழிகிறது ...
காதால் ஏந்துகிறேன்
காதல் என்கிறது
இசை !

கண்கள் திறந்தால்
காதலி நீ
கதைத்து கொண்டிருக்கிறாய்
தோழியுடன் !

எல்லா மொழி
இசையும் அலையும் காற்றில்
உன் வாய்மொழி
இசைதான் வழிகிறது என் காதில் !

மகிழ்ச்சியாய் பேசிகொண்டே
எதேச்சையாய் திரும்பிய நீ
என்னை பார்த்ததும் 
தொட்டாச்சிணுங்கியாய் 
சட்டென சுருக்கிவிடுகிறாய் 
உன் மகிழ் முகத்தை ...!

உன் தோழி 
என்னை காதலித்தாள்
உன் தோழியாதலால்
நானும் காதலித்தேன் 
அவள் காதலை 
அவள் காதலை மட்டும் ... !

உன்னால் என்னை 
புறக்கணித்தாலும் 
என் காதலை 
புறக்கணிக்க முடியவில்லையே 
அதை போல ...!

கோபமாய் அவ்விடமிட்டு 
தொலை தூரம் சென்று 
திரும்பாமல் திரும்பி 
பார்க்காமல் பார்க்கிறாய்...
அழாமல் அழுகிறேன் ... !

உன் தோழி 
என்னை பார்க்க 
நான் 
உன்னை பார்க்க 
நீ மட்டும் 
பார்வையை மூடுகிறாய் 
இருள்கிறது என் உலகம்  !

இருண்ட பிரதேசத்தில்
இசையாய் வழிகிறது 
காதல் !!!
Friday, November 26, 2010

பசிக்கொடுமை


வறுமை நாடுகளின் 
பசிக்கொடுமை நினைவில் வர 
பருக்கை மிச்சமில்லாமல்  
வழித்து பசியாறினேன் 


சாதம் கேட்டால்
போடவா மாட்டேன் 
பிச்சைக்காரன் போல் 
எச்சமில்லா  உண்கிறாயே என 
கோபம் கொண்டு 
மீண்டும் பரிமாறினாள்
பாசக்காரத் தாய் 


விளக்கம் சொன்னால்
விளங்காது இவளுக்கு 
பாசக்கண்ணுக்கு பார்வை 
கிடையாது  என 
மீண்டும் உண்டு 
பந்தியைவிட்டு வெளியேறினேன் 


வீட்டின் வெளியே 
அம்மா சோறு என்றான் 
பசிகொண்ட பிச்சைக்காரன் 
மிச்ச மீதியில்லை 
போய் நாளை வா என்றாள் 
பாசம்கொண்ட அன்னை 


விரக்தியோடு திரும்புபவனை 
சிரத்தையோடு கண்கள் பார்க்க 
வயிற்றில் இருக்கும் உணவு 
சோகத்தில் வயிற்றை முட்ட 
கோபமும் பாவமுமாய் 
கலவையான உணர்ச்சியோடு 
நின்று கொண்டிருக்கிறேன் 
வயிறு முட்ட ...
உணவு 
வயிறு முட்ட ....!!!Tuesday, November 16, 2010

கடற்கரை காதல்கடல் முகம் 

நாம் 
கடலோரம் காற்றாட 
நடந்து போகையில் 
என் காலை 
பிடித்து  கெஞ்சுகிறது கடல் 
உன் அழகு முகத்தை 
கொஞ்ச வேண்டும் என்று !

நான் எவ்வளவு சொல்லியும் 
இது உனக்கான முகம் என்று 
மறுத்துவிடுகிறாய் நீ !

கடைசியில் காலில் 
ஏதோ கறைபட்டு 
கழுவ செல்கிறாய் ...

உன் காலை 
முத்தமிட்ட மகிழ்ச்சியில் 
ஆனந்தமாய் கூச்சலிட்டு 
குதிக்கிறது கடல்...
அலையாய் !!!

வானமும் கடலும் 

உன் விரலோடு 
என் விரல் சேர்த்து 
வீசி நடக்கையில்...


தன இயலாமையால்
அலை அலையாய் 
அழும் கடலுக்கு 
ஆறுதலாய் அதன் 
தலை தடவும்  வானம் 
காரணம் கேட்ட பின் 
தானும் அழுகிறது 
மழை மழையாய் !!!


இருவரையும் நனைத்து விட்ட 
மழையை சாடுகிறேன் நான்
மழையால் உன் விரல் 
தொட்டபின் அழுகையை 
நிறுத்தி விடுகிறது 
வானம் !
விரக்தியில் வேகமாய் 
அழுகிறது 
கடல் !Tuesday, November 9, 2010

காமம் !!!


காமம் !!!

கண்ணில் காதலாய்
உதட்டில் ஆசையாய்
உடம்பில் வெப்பமாய்

உறுப்பில் விரைப்பாய்
கடைசியில் கழிவாய்

வெளியேறுகிறது
காமம் !!!

காமக்கடவுள்  !!!

காதல் போரில்
கட்டில் களத்தில் 
உடம்பை கொடுத்து 
உயிரை வாங்குகிறாள் 
அரசி 

உயிரை கொடுத்து 
மூச்சை வாங்குகிறான் 
அரசன் 

இங்கே  
முனகல் ஓசையுடன்
உயிர்கள் பரிமாறப்படுகின்றன 
காமம் என்னும் கடவுளுக்காக !!!

 

Tuesday, November 2, 2010

மீனும் தமிழும் !!!மீனும் தமிழும்  !!!
ரே சத்தத்தை 
மீண்டும் மீண்டும் எழுப்பி கூச்சலிடும்
வியாபாரியின் வாயை பார்த்து 
யாரை கூப்பிடுகிறார் 
என்று குழப்பத்தோடு இருந்த
இவைகளுக்கு 
குழம்பில் இடும்போதுதான் தெரிகிறது 
மீன் என்பது 
இவைகளின் பெயர்தான் என்று !!!


மீனவன் !!!

சிங்கள தேசத்தில் 
மீன்கள் கூட 
கொலை செய்கிறது 
சிங்களப்படை துணையுடன் ....
வெற்றியின் அடையாளமாய் 
மீன்கொடி பறக்கவிட்ட 
தமிழனை !!!


மீன் விழி !!!

முள்ளாய் குத்தும் 
அவள் பார்வைகள் 
உணர வைக்கின்றன 
அவள் விழிகள் 
மீன்கள் என்று !!!

Friday, October 29, 2010

நிறக்குருடு !!!

ழைத்துளியை  இடுப்பில் தாங்கி 
முத்த மழையில் நனைவதை 
நான் நெருங்கி பார்க்கையில் 
வெட்கத்தில் பச்சையாய் சிரிக்கிறது 
பசும் புல் !

அதன் பசுமை நிறத்தில் நான் 
என்னை தொலைத்து நிற்கையில் 
எல்லாம் ஒளிக்கதிரின் விளையாட்டு 
என காதில் சொல்கிறது 
அறிவு !

தன் மனதின் நிறத்தை 
தன் இரு கைகள் விரித்து 
நம் கண்முன் காண்பிக்கிறாள் 
பூமித்தாய் என்கிறது 
மனம் !

இரவுப்பொழுதில் கருகி 
போய் விடுமோ அவள்மனம் 
நமட்டு சிரிப்புடன் 
நக்கலாய் கேட்கிறது 
அறிவு !

உறங்கும்பொழுது உடைகளாய்
உடுத்தி இருக்கும் கூந்தலின் 
நிறம் என்று கோபமாய் கூறுகிறது 
மனம் !

இம்சை தாங்காமல் 
இமைகளை மூடினேன் 
ஒரே நிசப்தம் 
பசும்புல் சொன்னது 
உங்கள் பார்வை  பிடித்திருப்பதாய் !

பார்வைதான் காரணம் என்று 
பாடுபொருளே சொல்ல 
மனது மௌனமானது !
அறிவு ஆறுதலாய் 
அதன் கையை பற்றியது !

இரண்டும் சேர்ந்து 
நிறங்களை புறக்கணித்தன ...
இமையை திறந்தேன் 
எதிரே புல் 
கருப்பு வெள்ளையாய் !

மருத்துவர் மனைவியிடம் 
சொல்கிறார்
எனக்கு நிறக்குருடு என்று !!!Monday, October 25, 2010

கவிதை நினைவுகள் !!!

விலாசம்  !!!

எதிர்வீட்டில் குடியிருந்தாலும் 
என்னால் கண்டுபிடிக்க 
இயலவில்லை 
விலாசத்தை மட்டும் !

ஆம் ,
கனவில் வந்து காதலை சொல்ல 
காத்திருக்கும் என் கனவால் 
கண்டுபிடிக்க இயலவில்லை 
அவள் கனவின் விலாசத்தை மட்டும் !!!

இதயம் !!!

என்னவளின் நினைவுகளை 
என் இதயத்தில் 
வைத்து தைத்தேன் !

இதயம் வலித்தது 
எடுத்துவிட்டேன் வெளியே ...
என் இதயத்தை !!!


Thursday, October 21, 2010

யார் கடவுள் ?!

விடுமுறையில் 
நகரத்து தோழியை 
என் கிராமத்துக்கு  
அழைத்து வந்தேன் 

கிராமத்து விருந்தோம்பலில் 
விக்கித்துதான் போனாள் 

வீதியில் விளையாடிய 
வயது வராத குழந்தைகள் 
வீட்டு வாசலில் வீற்றிந்த 
வயது போன குழந்தைகள் என 
வியாக்கானம் விசாரிப்புகளில் 
வார்த்தைகள் இல்லை அவளிடம் !

வாழ்த்துவது வழிபடுவது 
வீண் சம்ப்ரதாயங்கள் எனும் 
முற்போக்கு தோழி 
விருப்பம் கேட்டு 
விருந்து வைத்த என் தாயை 
விழுந்து விழுந்து பாராட்டினாள் !

வயிறார உண்டு 
காலாற நடக்க 
வாய்க்காலும் வரப்பும் 
வரவேற்றது தோழியை 

வரப்பில் நான் நடக்க 
வாய்க்கால் தண்ணீரில் 
விளையாடி நடந்தாள் அவள் ...

பசுமையின் நிறம் பார்த்து 
பரவசத்தோடு சொன்னேன் 
கடவுளின் காட்சியை பார்த்தாயா என்று 
யார் கடவுள் என்றாள் 

பெரியாரின் தாக்கமோ என்றேன் 
யாரும் தாக்கவில்லை 
அறிவின் தாக்கம் என்றாள் 

அப்போ பெரியார் என்றேன் 
அறிவித்த ஆசான் என்றாள் 
அப்போ கல்வி அறிவை தரவில்லையா என்றேன் 

கல்வி மட்டுமே அறிவை தராது 
உதாரணம் 
ஏட்டை படித்த நீ 
கேள்வி கேட்கிறாய் 
பெரியாரை படித்த நான் 
பதில் சொல்கிறேன் 
என்றாள் புன்முறுவலோடு

அப்படியெல்லாம் சொல்லாதே
அறிவின் விடைதானே கேள்வி என்றேன் 
அறிவே கல்வியின் தொடக்கம் என்றாள் 

அப்படியென்றால் 
கடவுள் இல்லவே இல்லையா ? என்றேன் 
ராமர் பிறந்தது உண்மையா என்றாள் 

சிரித்தேன் சிரித்தாள்....
ஆக முன்னோர்தான் கடவுளா என்றேன் 
எனக்கு முன்னோர் உனக்கு கடவுள் என்றாள் 

அப்போ பெரியாரும் கடவுளும் ஒன்றா என்றேன் 
எனக்கு பெரியார் முன்னவர் 
உனக்கு கடவுள் முன்னவர் என்றாள் 

பாதி தூரம் சென்றிருப்போம் 
பாதையின் எதிரே பாம்பு 

வளைந்து வந்த நாகம் 
நேரே படமெடுத்தது ...
இரு கை கூப்பி 
இறைவனை வேண்டினேன்

இடது கை பிடித்து இழுத்தவள் 
வேகமாய்  நடந்தாள் 
வேறு பாதையில் ...

விருப்பங்களுடன் பயணிக்கிறேன் 
வாழ்க்கையின் வேறு பாதையில் ...!

Monday, October 18, 2010

காதலி ...தோழி ...முதிர்கன்னி !தொலைதூர பயணம் ஒன்றிற்கு 
தோழி அழைத்தாள்
வேலை பளுவில் அலுத்து போன நான் 
விருப்பத்தோடு சம்மதித்தேன் 

நீண்ட பேருந்து பயணம்...
தோளில் சாய்ந்தபடியே மூழ்கி போனாள்
புத்தகத்தின் கற்பனை குளத்தில் ...

காற்று அவள் தலைமுடியுடன் 
கலந்து விளையாடியது என்
காதில் ரீங்காரமாய் கேட்டது ...

உறங்கி போயிருந்த என்னை 
இடம் வந்ததும் எழுப்பினாள்
தோழி கலைந்த அழகுடன் ...

காதல் செய்யும் 
கற்சிலைகளை படம் பிடித்து 
கொண்டிருந்தேன் நான் ...

நெருங்கி வந்தவள் 
காதில் ஏதோ சொன்னாள்
முழுதாய் கேட்கவில்லை ...

கண்கள் பார்த்து மறுபடியும் 
சொல்ல பணித்தேன் ...
கல்யாணம் செய்து கொள்வாயா? என்றாள்

அதிர்ச்சியில் விலகி 
அவள் கண்களை பார்த்தேன் 
கணவன் இறந்ததும் 
கண்களை பார்ப்பதில்லை யாரும் என்றாள் 

இரண்டாண்டுக்கு முன்னே 
என் காதலை நிராகரித்தவள் 
இரண்டாவது மனைவியாய்
ஏற்றுகொள்ள சொல்கிறாள் ...

கண்கள் மூடி சொன்னேன் 
அரணாக இருக்க சம்மதம் 
கணவனாக இருக்க இயலாது என்று !

நிராகரிப்பின் வலியை
நீரால் வெளியேற்றியவள்
அரணாய் இருப்பதற்காக 
புன்னகையை பரிசாக்கினாள்...

ஆறுதலாய் அவள் கண்ணீர் துடைத்து 
கரம் பிடிக்க கை எத்தனித்தும் 
பிடிக்காமல் அவ்விடமிட்டு வெளியேற 

எதிரே 
மனதின் காட்சியாய்
அந்த காதல் கற்சிலை !!!

Thursday, October 14, 2010

காதல் இரத்தம்


 எத்தனை முறை சொல்லியும்          
ஏற்கவில்லை காதலை அவள் 

ஒரு நாள் எதற்காகவோ 
எதிரே வந்தாள் ...நின்றாள்

அழகு அடித்தது 
என் கண்களில் 
அவளை விழியில் வைத்து 
இமையால் மூடினேன் 
ஒரே இருட்டு !

இருட்டுக்கு பயந்து 
இதயத்திற்குள் விழுந்து விட்டாள்
 வலி தாங்காமல் வலது கையை 
இடது நெஞ்சில் வைத்தேன் ...

அழுத்தம் தாங்காமல் 
அழுதே விட்டாள்
ஆக்சிஜன் தந்து ஆசுவாசபடுத்தியது
என் இதயம் !

அயர்ச்சியில் கண் விழித்தவளுக்கு
ஆச்சர்யம் ...ஒரே செந்நிறம் !
இரத்தத்தின் நிறத்தில்  மயங்கி 
இரத்தத்தோடு கலந்து விட்டாள் !

தேகம் சூடாகி 
இமை தெறிக்க 
எதிரே என்னவள் ....
என்னை காதலிக்கிறேன் என்றாள் !

சிரித்தேன் ...
வெட்கப்பட்டு வேகமாக சாய்ந்தாள்
என் இடது பக்க நெஞ்சில் ...!
இதயம்  சொல்லியது 
என் இரத்தம் அல்லவா ?!

Wednesday, October 13, 2010

பெண்ணாதிக்கம்

பள்ளி வாழ்க்கை

படித்தே தீர்ந்தது

கல்லூரி வாழ்க்கை

கனவுகளால் முடிந்ததுவிளையாட்டாய் வேலைதேட

புறப்பட்டேன்

கஷ்ட்டப்பட்டு தேடியும்

கிடைக்கவில்லைவாழ்க்கையை ஆரம்பிக்க

முயற்சிக்கையில்

காதல் ஆரம்பித்தது

முயற்சியே இல்லாமல்வாழ்க்கையின் வெற்றிடத்தை

அவளே நிரப்பினால்

அனைத்து செலவையும்

அவளே பார்த்துகொண்டாள்குடுத்த தொல்லையில்

தூக்கி கொடுத்தார்

ஒரு வேலையை

கடவுள்காலம் கடந்தது

காதலை மூன்று முடிச்சால்

கல்யாணமாய்

முடித்து வைத்தேன்காதல் மனதிலேறி

காமம் கண்களிலேறி

கர்ப்பம் வயிறேரி

குழந்தையாய் வெளியேறினான்

என் மகன் !"மகனை மட்டும் பார்

வேலைக்கு நான் மட்டும்
போகிறேன்" என்றேன்

ஆணாதிக்கம் என்கிறாள்

என்ன செய்வது ?"ஆணாதிக்கம்" என்ற

வார்த்தையை வைத்து

பெண்ணாதிக்கம் செய்வதை

மனைவியாய் இருப்பதால்

இவள் மனம் உணரவில்லை

காதலியாய் இருந்தால்

உணர்ந்திருப்பாளோ ?!

பள்ளி நினைவுகள்

அரைக்கால் சட்டை

கலைந்த முடி

மேல்சட்டை பையில்

பேனா மை

சிலிப்பர் செருப்பு

முதுகில் சுமையாய்

புத்தகப் பை

காலையில் குளிக்க சொன்னால்

கொலை வெறி வரும்

பள்ளிக்கு செல்கையில்

பயம் வெறுப்பு என

மனம் ஊசலாடும்

தேர்வுகள் என்றால்

உயிர் போய்

உடம்பு சில்லிடும்

ஆசிரியை அடிக்கையில்

கோபம் கண்ணீராய் கொப்பளிக்கும்

அனைத்தும்

நினைவுக்கு வருகிறது

என் மகனை

நான் பள்ளிக்கு அனுப்புகையில் !!!