Friday, November 26, 2010

பசிக்கொடுமை


வறுமை நாடுகளின் 
பசிக்கொடுமை நினைவில் வர 
பருக்கை மிச்சமில்லாமல்  
வழித்து பசியாறினேன் 


சாதம் கேட்டால்
போடவா மாட்டேன் 
பிச்சைக்காரன் போல் 
எச்சமில்லா  உண்கிறாயே என 
கோபம் கொண்டு 
மீண்டும் பரிமாறினாள்
பாசக்காரத் தாய் 


விளக்கம் சொன்னால்
விளங்காது இவளுக்கு 
பாசக்கண்ணுக்கு பார்வை 
கிடையாது  என 
மீண்டும் உண்டு 
பந்தியைவிட்டு வெளியேறினேன் 


வீட்டின் வெளியே 
அம்மா சோறு என்றான் 
பசிகொண்ட பிச்சைக்காரன் 
மிச்ச மீதியில்லை 
போய் நாளை வா என்றாள் 
பாசம்கொண்ட அன்னை 


விரக்தியோடு திரும்புபவனை 
சிரத்தையோடு கண்கள் பார்க்க 
வயிற்றில் இருக்கும் உணவு 
சோகத்தில் வயிற்றை முட்ட 
கோபமும் பாவமுமாய் 
கலவையான உணர்ச்சியோடு 
நின்று கொண்டிருக்கிறேன் 
வயிறு முட்ட ...
உணவு 
வயிறு முட்ட ....!!!