Friday, February 18, 2011

அமாவாசை விரதம்


அமரர் விரதம் 

அனாதையாய் ஆகிப்போன 
தந்தையை தேடி 
உணவளித்தான் தமயன்
அமாவாசை அன்று !

காகமாய் வந்து 
கொத்தி தின்றார் 
தன் மகன் 
உண்ண வேண்டும் என்று !!!

கால நேரம் 
காலநேரத்தை நிர்ணயிக்க 
கடவுளும் சாத்தானும் 
கட்டி புரண்டு 
சண்டை போட்டார்கள் 

கீழே விழுந்த
கிழவனை நோக்கி 
கொல்லென சிரித்த 
குழந்தைகளை பார்த்து 
கிழவன் சொன்னான் 
"எல்லாம் என் நேரம் " என்று !!!


Tuesday, February 8, 2011

காதல் தூய்மை !!!


தாய்ப்பால் கேட்டு 
அடம் பிடிக்கும்
குழந்தையிடம் 
அழுகையை நிறுத்த 
பொம்மை கொடுப்பது 
போல்தான் இருந்தது 
என் காதலை மறுத்து
தோழனாய் நீ ஏற்றுகொண்டது !


தோழமையோடு பட்டாலும் 
சட்டென நீ கைகளை 
உருவிக்கொள்ளும்போது
அங்கே காதல் 
தோன்றி மறைகிறது 
எங்கோ சென்று 
மண்டியிட்டு அழுகிறது !


யாரையோ என்னிடம் 
கணவன் என்றாய் 
என்னை அவனிடம் 
நண்பன் என்றாய் 
என் கண்ணில் கோபம் 
அவன் கண்ணில் சந்"தேகம்"!

உன் கழுத்தில் 
மூன்று முடிச்சு விழ 
என் கண்ணில் 
கண்ணீர் முடிச்சு விழ 
எல்லோரும் மலர் 
வீசி வாழ்த்த 
நான் என்மனம் 
வீசி வாழ்த்தினேன் !

உன் அனுமதியோடு 
உன் கணவன்
உன் அழகை ரசிக்கலாம் 
உன் உடலை தரிசிக்கலாம் 
உன்னை காதலிக்க கூட செய்யலாம் 

முதலிரவு களத்தின்
மூச்சு விளையாட்டு 
முடிவில் உன் கன்னம் தொடு 
எச்சில் சொல்லும்
யார் காதல் தூய்மையானதென்று !!!