Thursday, December 23, 2010

காதல் களவியல் !!!



காதல் களவியல்

பருவப் பெண்களை
எதேச்சையாய் பார்க்கையில்
காமமும் வெப்பமும்
கலந்து விளையாட
கண்களும் இமைகளும்
இணைந்து விடைதேட
பகலிலேயே நினைவுகளால்
முடித்து விடும்
களவியல் விளையாட்டுகள்

உன் கண்கள்
பார்த்து பேசுகையில்
காற்றில் நழுவும்
தாவணி கண்டு
என் கண்கள்
உன்னைவிட்டு
எங்கேயோ பார்ப்பதன்
உளவியல் அர்த்தம்
என் காதலில்
காமத்தை மீறிய
தாய்மையும் இருப்பதே !!!

உன்னைத் தேடி 

நீ சிரிக்கையில்
என் சிரிப்பை நிறுத்தி
உன் சிரிப்பின் அழகை
சிந்தாமல் ரசிக்கையில்...
என்னை பார்க்காமல்
இருந்திருந்தால்
என்ன செய்திருப்பாய்
என்னும் உன் கேள்விக்கு
யோசிக்காமலேயே
சொல்கிறேன்
பார்வை இருந்தும்
குருடனாய்
வாழ்ந்திருப்பேன் என்று !