Wednesday, December 1, 2010

காதலின் இசை !!!


இருண்ட பிரதேசத்தில்
இசை வழிகிறது ...
காதால் ஏந்துகிறேன்
காதல் என்கிறது
இசை !

கண்கள் திறந்தால்
காதலி நீ
கதைத்து கொண்டிருக்கிறாய்
தோழியுடன் !

எல்லா மொழி
இசையும் அலையும் காற்றில்
உன் வாய்மொழி
இசைதான் வழிகிறது என் காதில் !

மகிழ்ச்சியாய் பேசிகொண்டே
எதேச்சையாய் திரும்பிய நீ
என்னை பார்த்ததும் 
தொட்டாச்சிணுங்கியாய் 
சட்டென சுருக்கிவிடுகிறாய் 
உன் மகிழ் முகத்தை ...!

உன் தோழி 
என்னை காதலித்தாள்
உன் தோழியாதலால்
நானும் காதலித்தேன் 
அவள் காதலை 
அவள் காதலை மட்டும் ... !

உன்னால் என்னை 
புறக்கணித்தாலும் 
என் காதலை 
புறக்கணிக்க முடியவில்லையே 
அதை போல ...!

கோபமாய் அவ்விடமிட்டு 
தொலை தூரம் சென்று 
திரும்பாமல் திரும்பி 
பார்க்காமல் பார்க்கிறாய்...
அழாமல் அழுகிறேன் ... !

உன் தோழி 
என்னை பார்க்க 
நான் 
உன்னை பார்க்க 
நீ மட்டும் 
பார்வையை மூடுகிறாய் 
இருள்கிறது என் உலகம்  !

இருண்ட பிரதேசத்தில்
இசையாய் வழிகிறது 
காதல் !!!