Saturday, December 20, 2008

நட்புலகம் !!!

அன்னை மடியிலே பிறந்தோம் !

தந்தை பிடியிலே வளர்ந்தோம் !

கல்வி கரையிலே தவழ்ந்தோம் !

நட்பில் மட்டுமே வாழ்ந்தோம் !


பிறக்கும்போது அழுதேன்

நண்பனில்லையே என்று !

இறக்கும்போதும் தொழுவேன்

நண்பா நீ வாழ வேண்டும் என்று !


காதல் கூட கசக்கும்

உள்ளத்தில் தோன்றி உடலில் முடிவதால் !

நட்பு மட்டும் இனிக்கும்

உள்ளத்தில் தோன்றி உயிர் விடும்போது முடிவதால் !...


தவறு செய்தால் தண்டிப்பாள் தாய் !

தவறு செய்யும் முன்னே தடுப்பவன் நண்பன் !


காதலில் சண்டை காமத்தினால்

நட்பில் சண்டை

நண்பா நாம் கொண்ட இறுக்கத்தினால் !


உன் தாய் கூட எனக்கு விரோதிதான்

உன்னை தண்டிக்கும்பொழுது !

உன் தந்தை கூட தீவிரவாதிதான்

உனக்கு திருமணம் செய்து நம் மனம் பிரிக்கும்பொழுது !


காதலை கூட மறந்துவிடுவேன்

என்னவள் உன் காதலி எனும் பட்சத்தில் !

உயிரை கூட விட்டு விடுவேன்

அவள் என்னை மட்டுமே காதலிக்கும் பட்சத்தில் !


நண்பா !

வா இமயம் தொடுவோம் !

இவ்வுலகை விடுவோம் !

வேற்று கோளுக்கு செல்வோம் !

காற்று இல்லையெனில்

கடவுளை ஏற்படுத்துவோம் !

கடவுள் கண்திறக்கும் வரை

உன் சுவாசம் எனக்கு

என் சுவாசம் உனக்கு !!!

அந்த கோளுக்கு பெயரிடுவோம்


நட்புலகம் என்று !


இந்த வுலகுக்கு கூறிடுவோம்


நட்பே உலகம் என்று !


நட்பே நமக்கு உலகம் என்று !


நண்பா !


என் உலகை நட்ப்பாக்கிய


உன்னை வாழ்த்தி ...


உன்னை எனக்கு கொடுத்த


உன் தாயை வணங்குகிறேன் !!!


நன்றி!!!