நீ என்னை
மிதிக்கும்பொழுது
ஈழத்தில் இறந்து போன
இதயங்களின் வலி !
உன் தேவை முடிந்ததும்
என்னை உதறி செல்கையில்
தாசி கருவின்
தவிப்பின் வலி !என்னை கொண்டு
பூமியை மிதிக்கையில்
மகன்களால் புறக்கணிக்கப்பட்ட
தாயின் வலி !
வலிகளின் கோபம்
என்னுள் இருந்தும்
எதுவும் செய்ய
இயலாத நான்
அவ்வப்போது கோபத்தில்
கடித்து பார்த்தும்
நீ கண்டுகொள்ளாமல்கடந்து செல்லும் வலி !
வலிகள் தாங்காமல்
விம்மி அழுதும்
கண்ணீர் வரமறுக்க ...
என் நிலைமைகண்டு
இயற்கை மழையாய்
அழுதிடும் சத்தத்தில்
இந்த அடிமையின்
குரல் யாருக்கும்
கேட்காமலேயே
போய்விடும் வலி !
வலிகளின் விரக்தியால்
என் காதுகளை பிய்த்துகொண்டு
கானலோரம் கிடக்கும்
என்னை எல்லோரும்
ஏளனமாய் விளிக்கிறார்கள்
யாருக்கும் பயன்படா
பிய்ந்த செருப்பு என்று !!!