Friday, January 7, 2011

ஊருக்கு திரும்பும் உணர்வுகள்


எத்தனை முறை
மிதித்தாலும் 
எழுந்து  சிரிக்கும் 
வரப்பு புல் 
யார் மனதிலும் 
கண்டிராத தெய்வீகம் 

என் முத்தத்திற்கு 
தன் உருவம் கரைத்து 
உதட்டோடு ஒட்டிக்கொள்ளும் 
பனித்துளியின் காமம் 
கண்டதில்லை 
எந்த காதலிலும் 

ஆற்று தண்ணீரெல்லாம் 
அடியேனின் வருகைக்காக 
அங்கேயே நிற்பதாய்
ஆனந்தமாய் சொல்கிறது 
அங்கிருந்து வந்த பறவை 
அப்போடியொரு சிநேகம் 
அமைந்ததில்லை 
அவனிடமும் அவளிடமும்

தென்றலும் பயிர்களும் 
சேர்ந்து ஆடும் 
சிலு சிலு அழகு 
எந்த பெண்ணின்
இடையிலோ கூந்தலிலோ
இதுவரை கண்டதில்லை 

இவ்வளவு இருந்தும் 
இத்தனை சொந்தங்களை 
இவ்வளவு காலம் பிரிந்தது 
இதுவரை பெற்ற சோகத்திற்கும் 
இனி பெறப்போகும் சுகத்திற்க்காகவும்தான் !!!