அமரர் விரதம்
அனாதையாய் ஆகிப்போன
தந்தையை தேடி
உணவளித்தான் தமயன்
அமாவாசை அன்று !
காகமாய் வந்து
கொத்தி தின்றார்
தன் மகன்
உண்ண வேண்டும் என்று !!!
கால நேரம்
காலநேரத்தை நிர்ணயிக்க
கடவுளும் சாத்தானும்
கட்டி புரண்டு
சண்டை போட்டார்கள்
கீழே விழுந்த
கிழவனை நோக்கி
கொல்லென சிரித்த
குழந்தைகளை பார்த்து
கிழவன் சொன்னான்
"எல்லாம் என் நேரம் " என்று !!!