Friday, March 25, 2011

சமத்துவச் சோதனை



ஆணும் பெண்ணும் 

சரிநிகர் என்னும் 

சமத்துவச் சோதனையில் 

ஆணாதிக்க வல்லமையோடு ...

அவள் மார்பு அகற்றி 

அந்தரங்க உறுப்பு மாற்றி 

தலைமுடி வெட்டப்பட்டு 

பார்க்கையில் 

அந்த கண்களில்

இடையின் நளினத்தில்  

"அவள்" தெரிந்தாள்

மூலம் யோசித்து 

மூளை இதயம் 

இரண்டும் 

என்னிடம் இருந்து  

இடம் மாற்றியும் 

"அவள்" அங்கே இருந்தாள்.

ஆம்,
பிழை நேர்ந்துவிட்டது 

இடம் மாற்றும்முன் 

காதல்வழி அவள் 

என்னுள் இறங்கி விட்டாள் !!!

என்னை வென்று  விட்டாள் !!!


Friday, March 18, 2011

வாழ்வியல் காதல் !!!


வாழ்வியல்  காதல்

உன்னை
பிறப்பு போல் பார்த்து 
சிரிப்பு போல் ரசித்து 
ஆசை போல் அணைத்து
இசை போல் காதலித்து ...

நாம் 
மௌனம் போல் வாழ்ந்து
நிராசை போல் வயதிழந்து
சோகம் போல் இறந்து 
உருவம் பெற வேண்டும் 
காதலில் !

ஆசை அலை 

கண்களால் 
உன் அழகைத்தான்  ரசித்தேன் 
ஆசைக் கடலில்
காமம் அலைபாய
அலையின் கோரத்தில் 
தானாகவே 
பிடித்துக்கொள்கின்றன 
சதை மேடுகளை  
அதே கண்கள் !!! 

Wednesday, March 9, 2011

ஊர் திருவிழா


ஊர் திருவிழா 


சாமி ஆட 
ஆடு பலியிட 
விலங்கு இனம் 
மனித இனமாய் 
உருமாறும் விழா 
பறவைகள் வாழ்த்த 
இனிதே நிறைவடைகிறது !


பிரிவு 
உன்னோடு 
முப்பது நாள் 
ஒட்டியே இருந்தாலும் 
மூன்று நாள் 
பிரிந்து சென்று 
மீண்டும் சேர 
உடலோடு சேர்ந்து 
உயிரும் ஒட்டிக்கொள்வதன் 
உள் அர்த்தம் 
நெருக்கத்தை விட 
பிரிவே 
நெருக்கமானதோ ?
நெருக்கம் ஆனதோ ?!

Tuesday, March 1, 2011

பெண் !!!


பெண் விடுதலை 

இந்தியா 
சுதந்திரம்  அடைந்தது
எல்லோரும் 
சந்தோசப்பட்டார்கள் 
இந்தியப் பெண்களும் ?!

தெய்வம் 
குழந்தைக்கு 
மொட்டை அடிக்கப்படுகிறது 
அழுகையை 
ரசித்து சிரிக்கிறார்கள் 
அன்னையும் சிரித்தாள்...
அவள் 
விழியோரம் மட்டும் 
ஏனோ நீர் !!!

Friday, February 18, 2011

அமாவாசை விரதம்


அமரர் விரதம் 

அனாதையாய் ஆகிப்போன 
தந்தையை தேடி 
உணவளித்தான் தமயன்
அமாவாசை அன்று !

காகமாய் வந்து 
கொத்தி தின்றார் 
தன் மகன் 
உண்ண வேண்டும் என்று !!!

கால நேரம் 
காலநேரத்தை நிர்ணயிக்க 
கடவுளும் சாத்தானும் 
கட்டி புரண்டு 
சண்டை போட்டார்கள் 

கீழே விழுந்த
கிழவனை நோக்கி 
கொல்லென சிரித்த 
குழந்தைகளை பார்த்து 
கிழவன் சொன்னான் 
"எல்லாம் என் நேரம் " என்று !!!


Tuesday, February 8, 2011

காதல் தூய்மை !!!


தாய்ப்பால் கேட்டு 
அடம் பிடிக்கும்
குழந்தையிடம் 
அழுகையை நிறுத்த 
பொம்மை கொடுப்பது 
போல்தான் இருந்தது 
என் காதலை மறுத்து
தோழனாய் நீ ஏற்றுகொண்டது !


தோழமையோடு பட்டாலும் 
சட்டென நீ கைகளை 
உருவிக்கொள்ளும்போது
அங்கே காதல் 
தோன்றி மறைகிறது 
எங்கோ சென்று 
மண்டியிட்டு அழுகிறது !


யாரையோ என்னிடம் 
கணவன் என்றாய் 
என்னை அவனிடம் 
நண்பன் என்றாய் 
என் கண்ணில் கோபம் 
அவன் கண்ணில் சந்"தேகம்"!

உன் கழுத்தில் 
மூன்று முடிச்சு விழ 
என் கண்ணில் 
கண்ணீர் முடிச்சு விழ 
எல்லோரும் மலர் 
வீசி வாழ்த்த 
நான் என்மனம் 
வீசி வாழ்த்தினேன் !

உன் அனுமதியோடு 
உன் கணவன்
உன் அழகை ரசிக்கலாம் 
உன் உடலை தரிசிக்கலாம் 
உன்னை காதலிக்க கூட செய்யலாம் 

முதலிரவு களத்தின்
மூச்சு விளையாட்டு 
முடிவில் உன் கன்னம் தொடு 
எச்சில் சொல்லும்
யார் காதல் தூய்மையானதென்று !!!

Monday, January 31, 2011

நிராகரிப்பு !!!


வெறுப்பு !!!

நீ என்னை
காதலிப்பதால் மட்டும்
நான் உன்னை
முழுதாக வெறுக்கிறேன்

ஆண்மையின் அழகு
காதலில் அடிபணிவதில்
எனக்கு எள்ளளவும்
விருப்பமில்லை !!!

அகம் !!!

முக அழகில்
முட்டாள் ஆகிவிடுவேனோ என
முழுதாய் நிராகரித்தேன் உன்
முழுமுதல் காதலை

காதல் தேர்வில் தோற்றாலும் 
கனவு நிற்கும்வரை
காதலிப்பேன் உன்
கனவை தொடாமல் என்றாய்

முட்டாள் ஆகிப்போனேன்
உன் அக அழகில் !!!